Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடக் கருமமே... ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் பிட்ச்சில் 'பிஸ்' அடித்த இங்கிலாந்து வீரர்கள்!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதால் உற்சாகத்தில் பிட்ச்சில் சிறுநீர் கழித்து அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.

கிரிக்கெட் விளையாட்டையே கேவலப்படுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள் என்றும் கண்டனக் குரல்கள் வெடித்துள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற மமதையில்தான் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள்.

3 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

3 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு முட்டை

ஆஸ்திரேலியாவுக்கு முட்டை

ஆனால் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெல்லவில்லை. இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்களும், வீரர்களும் செம அப்செட்.

கடைசிப் போட்டி டிரா

கடைசிப் போட்டி டிரா

ஏற்கனவே ஒரு போட்டி டிரா ஆகியிருந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 5வது போட்டியும் ஞாயிற்றுக்கிழமை டிராவில் முடிந்தது. இதனால் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது.

நள்ளிரவில் நச நச...

நள்ளிரவில் நச நச...

இந்த வெற்றியை இங்கிலாந்து வீரர்கள் தலை கால் புரியாமல் கொண்டாடியுள்ளனர். அதாவது மைதானத்திற்குள் புகுந்து பிட்ச்சில் போய் சிறுநீர் கழித்து விளையாடியுள்ளனர்.

வரலாறு காணாத வல்கர்

வரலாறு காணாத வல்கர்

இப்படி பிட்ச்சில் சிறுநீர் கழித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலேயே, அதன் வீரர்கள் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டிருப்பது வரலாறு காணாத வல்கர் செயல் என்று வர்ணிக்கப்படுகிறது.

பனீசரும் இப்படித்தான் செஞ்சாரு...

பனீசரும் இப்படித்தான் செஞ்சாரு...

சமீபத்தில் இப்படித்தான் இங்கிலாந்து வீரர் மான்டி பனீசர் கூட அசிங்கமாக கிளப் ஒன்றில் சிறுநீர் கழித்து கேவலமாக நடந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

ஓவல் மைதானத்திற்கு அவமானம்

ஓவல் மைதானத்திற்கு அவமானம்

இந்த சம்பவம் நடந்தது ஓவல் மைதானத்தில். பிரபலமான இந்த ஓவல் மைதான பிட்ச்சில் இப்படி இங்கிலாந்து வீரர்கள் சிறுநீர் கழித்த செயல் ஓவல் மைதானத்திற்குப் பெரும் அவமானமாகியுள்ளது.

யார் யாரெல்லாம் பிஸ் அடித்தது..

யார் யாரெல்லாம் பிஸ் அடித்தது..

கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர்தான் சிறுநீர் கழித்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுடன் மேலும் சில வீரர்களும் சம்பவ இடத்தின்போது இருந்தனராம்.

ஒருவேளை மோர்னு நினைச்சு நிறைய பீர் குடிச்சுட்டாங்களோ....

Story first published: Monday, August 26, 2013, 14:01 [IST]
Other articles published on Aug 26, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+