டேபிள் டேன்னிஸ்: முதல் சுற்றில் சரத் கமல் வெற்றி

ஒலிம்பிக்கில் இன்று காலை இந்தியாவுக்கு அஞ்சு பாபி ஜார்ஜ் ஏமாற்றமான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு சற்று ஆதரவு கிடைத்தது.
ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் அசந்தா சரத்கமல் வெற்றி பெற்றார்.
ஸ்பெயின் வீரர் ஆல்பிரடோ கார்னராஸை அவர் 6-11, 12-10, 11-8, 9-11, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மல்யுத்தம்: யோகேஷ்வர் தத் தோல்வி:
ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் சிறப்பாக ஆரம்பித்து கடைசியில் தோல்வியைத் தழுவினார்.
60 கிலோ மல்யுத்த காலிறுதிப் போட்டியில் யோகேஷ்வர் தத், ஜப்பானின் கெனிசி யுமோட்டோவுடன் மோதினார்.
இதில் முதல் ரவுண்டை வென்று நம்பிக்கையூட்டினார் தத். ஆனால் அடுத்த ரவுண்டில் யுமோடோ வீறு கொண்டெழுந்து டிரா செய்து விட்டார்.
3வது ரவுண்டில் யுமோடாவுடன் கடுமையாக மோதினார் தத். ஆனால் யுமோடா சிறப்பாக செயல்பட்டு அந்த ரவுண்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டியில் தத் வென்றிருந்தால் நிச்சயம் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கை கூடியிருக்கும்.
முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் பர்ஸானை 3-1 என்ற கணக்கில் தத் வீழ்த்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications