Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் விஜய் குமார் தகுதி சுற்றுடன் 'அவுட்'

London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் 31வது இடத்தை பெற்று தகுதி சுற்றுடன் வெளியேறினார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் உட்பட மொத்தம் 52 வீரர்கள் பங்கேற்றனர். ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் 26 வயது விஜய் குமார் துவக்கத்தில் சிறப்பாக புள்ளிகளை சேர்த்தார்.

முதல் நிலையில் 94 புள்ளிகளை சேர்த்தார். 2வது நிலையில் 92 புள்ளிகளும், 3வது நிலையில் 94 புள்ளிகளும் சேர்த்தார். அதன்பிறகு 4வது நிலையில் 97 புள்ளிகளை சேர்த்தார். இதன்மூலம் 4 நிலைகளில் 400க்கு 380 புள்ளிகளை சேர்த்தார்.

ஆனால் 5வது நிலையில் 97 புள்ளிகளும், 6வது மட்டும் கடைசி நிலையில் 93 புள்ளிகளும் சேர்த்தார். இதனால் மொத்தம் 600க்கு 570 புள்ளிகளை மட்டுமே விஜய் குமாரால் சேர்க்க முடிந்தது. இதன்மூலம் இந்திய வீரர் விஜய்குமார் புள்ளிப் பட்டியில் 31வது இடத்தை பெற்றார்.

முதலிடத்தை பெற்ற ஜாப்பான் வீரர் ஜான்கங் 588 புள்ளிகளை பெற்றார். 2வது இடத்தை பிடித்த சீனாவின் வை பங் 586 புள்ளிகளையும் எடுத்தார். இவர்கள் இருவரும் உட்பட புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதி சுற்றிற்கு முன்னேறினர்.

Story first published: Saturday, July 28, 2012, 18:57 [IST]
Other articles published on Jul 28, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+