தன்வீர் உட்பட 6 பாக். வீரர்களுக்கு கராச்சியில் விளையாட தடை

அவர்கள் சமீபத்தில் நடந்த ரமலான் சிறப்பு டுவென்டி-20 போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாகவும், அம்பயர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் சோஹைல் தனவீர், அகமது ஷாசத், சோஹைல் கான், ஜாவித் காதிர் ஆகிய நான்கு பேரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் வீரர்கள். தன்வீர் அகமது மற்றும் நதீம் ஷேக் என்ற இருவர உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வருபவர்கள்.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்த 15ம் தேதி கராச்சி ஜிம்கானா மைதானத்தில் ரமலான் சிறப்பு டுவென்டி-20 தொடரின் காலிறுதி போட்டி நடந்தது. போட்டியின் போது சர்வதேச டெஸ்ட் அம்பயர் ரியாஸூதின் மற்றும் ஜூனைத் காபூர் ஆகியோர் அம்பயர்களாக செயல்பட்டனர்.
அவர்கள் சோஹைல் தன்வீர் உட்பட 6 வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாகவும், தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த 6 வீரர்களும் கராச்சி மைதானத்தில் விளையாட தடை விதித்துள்ளோம் என்றார்.
ஆனால், இந்த தடை எவ்வளவு நாட்களுக்கு என்பதை பாகிஸ்தான் வாரியம் தெரிவிக்கவில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications