நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கான தகுதி சுற்றின் முதல் போட்டியில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றார்.
யுஎஸ் ஒபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 31ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்குகிறது.
தற்போது இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்களுக்கான முதல் சுற்றுப்போட்டியில் தரவரிசையில் 161வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தரவரிசையில் 133வது இடத்திலுள்ள அமெரிக்காவின் அலெக்ஸ் போகோமொலவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் முழு திறமையும் வெளிப்படுத்திய சோம்தேவ் முதல் செட்டை 6-3 என வென்றார். இரண்டாவது செட்டையும் அதே கணக்கில் வென்றார். இறுதியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் சோம்தேவ் டென்மார்க் வீரர் இகோர் சிஜ்சிலங்கை சந்திக்கிறார். டென்மார்க் வீரர் தரவரிசையில் 305வது இடத்தில் இருப்பதால் சோம்தேவ் இப்போட்டியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரகாஷ் தோல்வி...
மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ் 6-7, 6-4, 3-6 என கொலம்பியாவின் அலஜாந்ரோ பெல்லாவிடம் வெற்றியை பறிகொடுத்தார்.