யுஎஸ் ஓபன் டென்னிஸ்-தகுதி பெற்றார் சோம்தேவ்

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துவங்குகிறது. இதற்கு முன்னதாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் கடந்த 289ம் தேதி நடந்த மூன்றாவது சுற்று போட்டியில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், போலந்து வீரர் ஜெர்சி ஜானோவிஸ்சை எதிர்கொண்டார். இதில் சோம்தேவ் 6-3. 5-2 என முன்னிலை வகித்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறுநாள் 29ம் தேதி இரவு நடந்த போட்டியில் சோம்தேவ 6-3, 6-2 என்ற செட்களில் வென்று யுஎஸ் ஓபன் தொடரின் முக்கிய சுற்றுக்குள் நுழைந்தார்.
இதையடுத்து சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடவிருக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக கடந்த 2002ல் நடந்த யுஎஸ் ஓபன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் விளையாடியிருந்தார்.
சோம்தேவ் இன்று நடக்கும் முதல் சுற்றுப்போட்டியில் தரவரிசையில் 110வது இடத்தில் இருக்கும் போர்ச்சுக்கல் வீரர் பெடரிக்கோ கில்லுடன் மோதுகிறார்.
சானியா-வோல்கா மோதல்...
இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, பெலாரசின் வோல்கா கோவர்ட்சோவை எதிர் கொள்கிறார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications