யுஎஸ் ஓபன் டென்னிஸ்-சோம்தேவ் போராடி தோல்வி
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் போராடி தோல்வியைடந்தார்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்ற இவர் முதல் சுற்றில் போர்ச்சுக்கல் வீரரை தோற்கடித்தார்.
இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் அவர், ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை எதிர்கொண்டார். இதில் கடுமையாக போராடிய சோம்தேவ் முதல் இரண்டு செட்களை 6-3, 6-4 என பறிகொடுத்தார்.
மூன்றாவது செட்டில் ஜெர்மனி வீரருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். அதை 6-0 என எளிதாக வென்று அசத்தினார். ஆனால், அனுபவம் வாய்ந்த ஜெர்மனி வீரர் நான்காவது செட்டை கைப்பற்றினார். இறுதியில் சோம்தேவ் 3-6, 4-6, 6-0, 2-6 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.
போட்டிக்கு பின்னர் 24 வயதான சோம்தேவ் அளித்த பேட்டியில்,
இது மிகச்சிறந்த அனுபவம். யுஎஸ் ஓபன் தொடருக்கு தகுதி பெற்றது எனது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை. முதல் போட்டியில் வென்று இரண்டாவது போட்டியில் முன்னணி வீரருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடினமாக உழைத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி தரவரிசையில் முன்னேறுவேன். லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் எனக்கு ஊக்க சக்தியாக இருந்து வருகின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications