யுஎஸ் ஓபன் தகுதிச்சுற்று-3வது சுற்றில் சோம்தேவ்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஒபன் வரும் 31ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்குகிறது.
தற்போது இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், டென்மார்க்கின் இகோர் சிஜ்ஸ்சிலிங்கை சந்தித்தார்.
இதில் அபாரமாக சர்வீஸ் செய்த சோம்தேவ் முதல் செட்டை 6-3 என வென்றார். இதையடுத்து சோம்தேவ் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டாவது செட்டை கைப்பற்ற இரண்டு வீரர்களுக்கும் இடையே கடும் போராட்டம் நடந்தது. டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை சோம்தேவ் 6-7 என இழந்தார். பின்னர் சுதாரித்து ஆடிய சோம்தேவ் மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
இறுதியில் 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதில் அவர் போலந்தின் பெரி ஜானோவிஸ்சுடன் மோதுகிறார். இந்த போட்டியில் வென்றால் சோம்தேவ் யுஎஸ் ஓபன் முக்கிய சுற்றுக்கு முன்னேறலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications