சென்னை ஓபன் டென்னிஸ் - இறுதியில் சோம்தேவ் - புதிய சாதனை

சென்னையில் நடந்து வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வைல்ட் கார்ட் வீரராக நுழைந்து அடுத்தடுத்து முன்னணி வீரர்களை வீழ்த்தி அசத்திக் கொண்டிருக்கிறார் சோம்தேவ்.
இளம் வீரரான சோம்தேவ் உலக அரங்கில் 202வது ரேங்க்கில் இருப்பவர் ஆவார்.
ஆனால் இவா கார்லோவிக், கார்லஸ் மோயா, இவா கார்லோவி்க் ஆகிய இரு முன்னணி வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அரை இறுதிப் போட்டியில் ரெய்னர் ஷட்லரை சந்திப்பதாக இருந்தார் சோம்தேவ். ஆனால், காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகி விட்டதால், வாக்ஓவர் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார் சோம்தேவ்.
சென்னை ஓபன் போட்டியின் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் சோம்தேவ்தான். அந்த வகையில் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
சமீப காலத்தில் ஏடிபி போட்டி ஒன்றின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2வது வீரர் சோம்தேவ். இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஹால் ஆப் பேம் டென்னிஸ் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் தகுதி பெற்றார். அப்போட்டியில் அவர் பெப்ரிஸ் சான்டோராவிடம் தோல்வியுற்றார்.
சென்னை ஓபன் போட்டியில், வைல்ட் கார்ட் வீரராக நுழைந்து சாம்பியன் பட்டத்தை பெற்ற ஒரே வீரராக தற்போது குரோஷியாவின் இவான் ஜுபிசிக் உள்ளார். 2006ம் ஆண்டு அந்த சாதனையைப் படைத்தார் இவான். அந்த சாதனையை சோம்தேவ் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இறுதிப் போட்டியில் வலுவான நிலையில் உள்ள குரேஷியாவின் மரின் சிலிக்கை சந்திக்கவுள்ளார் சோம்தேவ்.
இன்னொரு அரை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீரர் மார்சல் கிரனோலர்ஸை சந்தித்த சிலிக், அவரை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications