டிவியில் குவிஸ் ஷோ நடத்தப் போகிறார் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ரிங் மாஸ்டரான கங்குலி, தனது தலைமையில் இந்திய அணியை ராணுவ மிடுக்குடன் வழி நடத்திச் சென்றார்.
அஸாருதினுக்குப் பின்னர் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர் என்ற பெருமையுடன் வலம் வந்தார் கங்குலி. பின்னர் அவருக்கும் நேரம் சரியில்லாமல் போனது. பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் போன அவரது கிரிக்கெட் வாழ்க்கை சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுக்கு வந்தது.
இந்த நிலையில் பெங்காலி டிவி ஒன்றில் குவிஸ் ஷோவை நடத்தப் போகிறார் கங்குலி.
பெங்காலியில் முன்னணி டிவியான ஜீ பங்களா டிவியின் குவிஸ் ஷோவை கங்குலி காம்பயரிங் செய்யவுள்ளார். வாராந்தர ஷோவாகும் இது.
இதுகுறித்து அனந்த பஸார் பத்ரிகாவுக்கு கங்குலி அளித்துள்ள பேட்டியில், ஆமாம், குவிஸ் ஷோவை நடத்தப் போவது உண்மைதான். எப்படி குவிஸ் ஷோவை நடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அந்த தைரியத்தில்தான் இதை ஒத்துக் கொண்டேன் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு தாதாகிரி என பெயர் சூட்டியுள்ளனராம். தாதா என்பது கங்குலியின் செல்லப் பெயர் என்பது சுட்டிக் குழந்தைகளுக்கும் தெரியும்.
மொத்தம் 72 எபிசோடுகளுடையதாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளத
Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications