Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடன மங்கைகளின் கோலாகல நடனத்துடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா

Spice Girls
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை நடைபெற உள்ள 15 போட்டிகளுடன் முடிவு அடைகிறது. ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடன மங்கைகளின் நடனம், வாணவேடிக்கை ஆகியவை உடன் கோலாகலமாக முடிவடைய உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 205 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய மொத்தம் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் இதுவரை இந்தியாவிற்கு 1 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இன்று மற்றும் நாளைய போட்டிகளிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளாக நாளை ஆண்களுக்கான மாரத்தான், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாட்டர் போலோ, மல்யுத்தம், குத்துச்சண்டை, சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக் உட்பட மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளது.

இதன்முடிவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. வரும் 13ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிறைவு விழா துவங்குகிறது. இதில் துவக்க விழாவை போலவே, இசை நிகழ்ச்சி, நடன மங்கைகளின் நடனம், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற உள்ளது. ஆனால் இது குறித்த விபரங்களை, லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.

இது குறித்து லண்டன் விளையாட்டு துறை தலைவர் செபஸ்டியன் கூறியதாவது,

நாளை ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா அல்ல. நிறைவு விழா என்றாலும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் பராம்பரிய இங்கிலாந்து இசை நிச்சயம் இடம்பெறும் என்றார்.

Story first published: Saturday, August 11, 2012, 16:45 [IST]
Other articles published on Aug 11, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+