Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஸ்பைஸ் கேர்ள்ஸ் ஆட்டம்!

Spice Girls
லண்டன்: முற்றிலும் பெண்களைக் கொண்ட பாப் குழுவான ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவினர், லண்டன் ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஒரு கச்சேரி செய்யவுள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி நெருங்கி விட்டது. வீரர்கள், வீராங்கனைகள் தவிர போட்டி அமைப்பாளர்களும் கூட போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தீவிரமாக களம் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஸ்பைஸ் கேர்ள்ஸ், பாப் குழு தனது கச்சேரியை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனராம்.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள கெரி ஹலிவெல், எம்மா பன்டன், மெலனி சிஸ்ஷோல்ம், மெலனி பிரவுன், விக்டோரியா பெக்காம் ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக இணைந்து எங்குமே நிகழ்ச்சியைக் கொடுத்ததில்லை என்பதால் இவர்களின் ஒலிம்பிக் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவில் ஒருவரான விக்டோரியா பெக்காம், இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் மனைவி என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, July 23, 2012, 13:05 [IST]
Other articles published on Jul 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+