Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூர் கிறிஸ்ட் கல்லூரியில் 13ம் தேதி 'ஸ்போர்ட்ஸ் மீட்'

SportsMeet
பெங்களூர்: விளையாட்டு வீரர்களுக்கு அதிக ஊக்கம் அளித்து, விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் வரும் 13ம் தேதி பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் ஸ்போர்டமீட் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உடல்திறன் ஆலேசகர்கள், மேலாளர்கள் உட்பட விளையாட்டு போட்டிகளில் தொடர்புடைய மக்களை ஒன்று திரட்டி, நாட்டில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், மாதந்தோறும் ஸ்போர்ட்மீட் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த மாதத்தின் ஸ்போர்ட்மீட் நிகழ்ச்சி பெங்களூர் கிறிஸ்ட் கல்லூரியில் வரும் 13ம் தேதி மாலை 2.15 மணிக்கு நடைபெற உள்ளது. கிறிஸ்ட் கல்லூரியின் சென்டரல் பிளாக்கில் உள்ள 3வது மாடியில் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் நாட்டில் உள்ள விளையாட்டு துறையை மையமாக கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதன் மூலம் நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் விளையாட்டு துறையின் அடிப்படையாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

கடந்த ஜூன் மாதம் துவக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 4வது ஸ்போர்ட்மீட் நிகழ்ச்சியில் 'விளையாட்டு துறையில் பத்திரிக்கை' என்ற கருத்தை மையமாக எடுத்து கொளப்பட்டுள்ளது. இதில் ஹிந்து பத்திரிக்கையின் ஸ்போர்ட்ஸ்டார் மூத்த விளையாட்டு ஆசிரியர் கல்யாண் அசோக் கலந்து கொண்டு, விளையாட்டு துறையில் பத்திரிக்கை துறையின் வளர்ச்சி என்பதை குறித்து உரையாற்ற உள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இது குறித்து மேலும் விபரங்களுக்கு 9008299122 (சுபாஜோதி பானர்ஜி) என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Story first published: Thursday, October 11, 2012, 10:00 [IST]
Other articles published on Oct 11, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+