2 நாட்களி்ல் முடிவுக்கு வருகிறது ஒலிம்பிக்ஸ்!

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக்ஸ். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்து வருகின்றன.
ஒலிம்பிக் போட்டியின் முக்கால்வாசிப் போட்டிகள் முடிந்து போய் விட்டன. இன்னும் 10 போட்டிகள் மட்டுமே நடைபெற வேண்டியுள்ளது. இதையடுத்து பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் போட்டி நிர்வாகம் கவனத்தை திருப்பி ஆரம்பித்துள்ளது.
உடல் ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஒலிம்பிக் போட்டி இது. பெய்ஜிங் நகரில் செப்டம்பர் 6ம் தேதி பாரா ஒலிம்பிக்ஸ் நடைபெறவுள்ளது. இதற்காக 2 லட்சத்து 90 ஆயிரம் டாலர்களை பெய்ஜிங் நகர நிர்வாகம் செலவிடுகிறது.
போட்டிக்கு வரும் போட்டியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காக நகரில் உள்ள அனைத்து 3 நட்சத்திர ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டு விட்டன. அங்கு ஊனமுற்றோர் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள், அறைகளில் ஊனமுற்றோர் எளிதில் வந்து செல்ல தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெய்ஜிங் நகரில் உள்ள ஹெவன் டெம்பிள் எனப்படும் சொர்க்க கோவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வரும் ஊனமுற்றோர் இந்த கோவிலை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு ரேம்ப் வசதி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீல் சேர்கள் மூலம் கோவில் வளாகத்தை வீரர், வீராங்கனைகள் சுற்றிப் பார்த்து மகிழ முடியும். மேலும் வாய் பேச முடியாத, காது கேளாத வீரர், வீராங்கனைகளுக்கு கோவில் வரலாறு குறித்து விளக்குவதற்காக கோவில் ஊழியர்களுக்கு சைகை பாஷை கற்றுத் தரப்பட்டுள்ளது.
இதுதவிர சீனாவின் பழம் பெரும், பாரம்பரிய இடங்களுக்கும் வீரர், வீராங்கனைகள் அழைத்துச் செல்லப்படுவர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications