Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரீசாந்த்தின் செயல் முன்பே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தெரியும்?

Sreesanth was 'sacked' by RR before arrest
பெங்களூர்: ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்கூட்டியே தெரியும் என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே ஸ்ரீசாந்த்தை அணியிலிருந்து நிர்வாகம் நீக்கி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மே 12ம்தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்குப் பின்னர் அணியை விட்டு விலகி விடுமாறு ஸ்ரீசாந்த்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஜெய்ப்பூரில் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேறுமாறும் அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாம். இது ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் உறுதிப்படுத்தவில்லை.ஆனால் அவரது செயல்பாடுகள் சரியில்லை என்பதைத் தொடர்ந்தே இந்தநடவடிக்கையை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தாக அந்த அணி தரப்பில் கூறப்படுகிறது.

அணியிலிருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்த ஸ்ரீசாந்த், கேப்டன் ராகுல் டிராவிடிடம் சண்டைக்குப் போனதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Monday, May 20, 2013, 13:19 [IST]
Other articles published on May 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+