நேரு கோப்பை-சிரியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஐந்து நாடுகள் பங்கேற்ற நேரு கோப்பை கால்பந்து தொடர் டெல்லியில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், இந்தியா, சிரியா அணிகள் மோதின.
போட்டியின் துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராடின. ஆனால், இரு அணியின் பின்கள வீரர்களும் திறமையாக விளையாடியதால் இரண்டாவது பாதியின் முடிவி்ல் ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் சுறுசுறுப்பாக செயல்பட்ட ரெனடி சிங் 35 அடி தூரத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றினார். போட்டி முடிவதற்கு ஒரு நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் சிரிய அணியின் அலி தியாப் ஒரு கோலடிக்க போட்டி மீண்டும் 1-1 என சமநிலையை எட்டியது.
இதையடுத்து 'சடன் டெத்' முறையில் வெற்றியை உறுதி செய்ய நடுவர்கள் தீர்மானித்தனர்.
இதில் இந்திய வீரர்கள் கிளைமேக்ஸ் லாரன்ஸ், சுனில் சேத்ரி, ஸ்டீவன் டையாஸ், அன்வர் அலி, சுர்குமார் சிங் ஆகியோர் சிரிய கோல்கீப்பரை ஏமாற்றி கோல் அடித்தனர்.
சிரியா சார்பில் ராஜா ரபே, மோசப் பல்ஹவுஸ், அப்துல் படா, அப்துல் ரசாக் உசைன் ஆகியோர் கோல் அடித்தனர்.
ஹம்சே அட்டாவ்னி, வேய்ல அயன், அகமது ஹஜ் முகமது ஆகியோரது ஷாட்களை இந்தியா கோல்கீப்பர் சுப்ரதோ பால் அருமையாக தடுத்தார். இதையடுத்து இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக நேரு கோப்பையை வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications