Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள்: டைகர் வுட்ஸ் நம்பர் 1; டோணி 16

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான 'போர்ப்ஸ்' இதழ், இந்த ஆண்டு அதிக பணம் சம்பாதித்த வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.இந்தியா கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி 16 இடம் பெற்றுள்ளார்.

விளையாட்டு வீரர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த விபரங்களை மேற்கொண்டு படியுங்களேன்.

டைகர் உட்ஸ்

டைகர் உட்ஸ்

அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.அவர் 2012-ம் ஆண்டு ஜூன் முதல் 2013-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.475 கோடி சம்பாதித்து இருக்கிறார்.

ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 2வது இடத்தில் உள்ளார். அவரது வருமானம் ரூ.435 கோடி.

டேவிட் பெக்காம்

டேவிட் பெக்காம்

இங்கிலாந்து நாட்டின் கால்பந்து ஜாம்பவான் 47.2 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி 8ம் இடத்தில் உள்ளார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறப்போகும் பெக்காம் தனது வருமானத்தில் 5.3 மில்லியன் டாலரை குழந்தைகள் நலனுக்காக அளித்துள்ளார்.

இந்தியாவின் டோனி

இந்தியாவின் டோனி

இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 16-வது இடத்தில் உள்ளார். அவர் ரூ.192 கோடி ஈட்டி இருக்கிறார். இதில் விளம்பரம் மூலம் வந்த வருமானம் ரூ.170 கோடி ஆகும். எஞ்சிய ரூ.22 கோடி பரிசுத்தொகை மற்றும் போட்டிக்குரிய ஊதியம்.

ரபேல் நடால்

ரபேல் நடால்

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் 30 வது இடத்தில் உள்ளார். அவரது வருமானம் 26.4 மில்லியன் டாலர்.

டெண்டுல்கர் 51

டெண்டுல்கர் 51

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ரூ.134 கோடி வருமானத்துடன் 51-வது இடத்தில் உள்ளார்.

மரியா ஷரபோவா

மரியா ஷரபோவா

வீராங்கனைகளில் ரஷியாவின் டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறார். 100 பேர் அடங்கிய பட்டியலில் இவருக்கு 22 வது இடம் கிடைத்துள்ளது. அவரது வருவாய் தொகை ரூ.176 கோடி. இதில் விளம்பரம் மற்றும் இதர வர்த்தகத்தின் மூலம் சேகரித்த ரூ.140 கோடியும் அடங்கும்.

ஷெரினா வில்லியம்ஸ்

ஷெரினா வில்லியம்ஸ்

அவருக்கு அடுத்தபடியாக வீராங்கனைகளில் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் உள்ளார். 100 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் அவருக்கு 68 வது இடம் கிடைத்துள்ளது. அவரது வருடாந்திர வருமானம் ரூ.125 கோடியாக உள்ளது.

Story first published: Thursday, August 8, 2013, 16:31 [IST]
Other articles published on Aug 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+