For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை டென்னிஸ்: இறுதிப் போட்டியில் டிப்சரோவிச் - பாடிஸ்டா மோதல்

By Mathi
Janko Tipsarevic
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 18-வது ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இறுதியில் டிப்சரோவிச் - பாடிஸ்டா மோதுகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அரைஇறுதியில் 9-ம் நிலை வீரர் செர்பியாவின் ஜாங்கோ டிப்சரேவிச், 86-ம் நிலை வீரர் சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனுடன் மோதினார். 2 மணி 6 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த டிப்சரேவிச் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சென்னை ஓபனில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரைஇறுதியில் 80-ம் நிலை வீரர் ஸ்பெயினின் பாடிஸ்டா, 47-ம் நிலை வீரர் பிரான்சின் பெனோய்ட் பேரை சந்தித்தார். ஒரு மணி 54 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பாடிஸ்டா 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் இறுதிஆட்டத்தில் டிப்சரேவிச்-பாடிஸ்டா பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் போட்டிகளில் இந்திய வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை.

Story first published: Sunday, January 6, 2013, 10:06 [IST]
Other articles published on Jan 6, 2013
English summary
Second seed Janko Tipsarevic of Serbia lived dangerously before prevailing over Slovakia's Aljaz Bedene 4-6 6-2 6-2 to enter the final of the Aircel ATP Chennai Open Tennis Tournament here on Saturday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+