பயஸுடன் விஷ்ணு இணைந்து விளையாடுவார்: இந்திய டென்னிஸ் சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாட மகேஷ் பூபதியும் போபண்ணாவும் மறுத்ததால் சர்ச்சை வெடித்திருந்தது. லண்டன் செல்லும் இந்திய அணி வீரர்கள் பெயரை அறிவிக்கும் கெடுவும் முடிவடைய இருந்தது. இந்நிலையில் தமக்கு உடல் தகுதி இருப்பதால் தாம் பயஸூடன் விளையாட தயார் என்று சோம்தேவ் தேவ்வர்மன் தெரிவித்திருந்தார். இதனால் பயஸுடன் சோம்தேவ் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பயஸுடன் விஷ்ணு வர்தனும் பூபதியுடன் போபண்ணாவும் இணைந்து விளையாட உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் பயஸுடன் விளையாட மறுத்ததற்காக பூபதி மற்றும் போபண்ணா மீது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் டென்னிஸ் சங்கம் அறிவித்திருக்கிறது.
Story first published: Thursday, June 21, 2012, 13:38 [IST]
Other articles published on Jun 21, 2012


Click it and Unblock the Notifications