அப்படியே டோணி மாதிரியே ஆடனும்ணே...ஸோல் விருப்பம்

இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக ஸோல் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் பொறுப்பு மகிழ்ச்சி தருகிறது. எனக்கு முன்மாதிரி கேப்டன் டோணிதான். அவரைப் போல செயல்பட வேண்டும், வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
முடிந்தால் டோணியை மிஞ்ச வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்றார் ஸோல்.
ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரை ஸோல் தலைமையில் இந்திய அணி வென்றது. மேலும், அத்தொடரின் நாயகனாகவும் ஸோல் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, July 14, 2013, 15:36 [IST]
Other articles published on Jul 14, 2013


Click it and Unblock the Notifications