8 தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார் பெல்ப்ஸ்

அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்ஸ் கடந்த 1972ம் ஆண்டு நடந்த மூனிச் ஒலிம்பிக் போட்டியில், 7 தங்கப் பதக்கங்களை வென்றதுதான் ஒரு வீரர் ஒரு போட்டியில் அதிக தங்கம் வென்ற சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இன்று பெல்ப்ஸ் முறியடித்தார்.
அடுத்தடுத்து தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்த பெல்ப்ஸ் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய உலக சாதனையைசமீபத்தில்தான் படைத்தார். இந்த நிலையில் இன்று 2வது சாதனையைப் படைத்தார்.
நேற்று வரை 7 பதக்கம் வென்றிருந்த பெல்ப்ஸ் இன்று தனது 8வது பதக்கத்தையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
இன்று நடந்த 400 மீட்டர் மெட்லே தொடர் போட்டியில், அமெரிக்க அணி முதலிடத்ைதப் பிடித்தது. அதுவும் உலக சாதனையுடன் இந்தப் போட்டியை அமெரிக்கா வென்றது.
பெல்ப்ஸ், ஹன்சன், ஆரோன், ஜேசன் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 3.29.34 என்ற நேரக் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளியும், ஜப்பானுக்கு வெண்கலமும் கிடைத்தன.
பெல்ப்ஸ் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 14 தங்கப் பதக்கம் வென்று அசைக்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications