200 மீட்டர் ஓட்டம்- உசேன் போல்ட் உலக சாதனை!
பெய்ஜிங்: ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தடகளப் பிரிவில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறார்.
100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற உசேன் போல்ட் அதில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
இந்த நிலையில் நேற்று நடந்த 200 மீட்டர் இறுதிப் போட்டியில், அவர் அபாரமாக ஓடி 19.30 விநாடிகளில் தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தார். இதன் மூலம் போல்ட்டுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கடந்த 24 ஆண்டுகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் போல்ட்டுக்குக் கிடைத்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications