ஒலிம்பிக்: குத்துச் சண்டை போட்டியில் தோற்று இந்தியாவின் விஜேந்தர் வெளியேறினார்

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜேந்தர்சிங் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
காலிறுதியில் விஜேந்தர்சிங் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்பாஸ் அதோவுடன் மோதினார். முதல் சுற்றில் 3-3 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். அடுத்தடுத்த சுற்றுகளில் உஸ்பெகிஸ்தான் வீரர் தமது பலத்தை வெளிப்படுத்த விஜேந்தர்சிங் ஆடிப் போனார்.. கடைசியில் 5-7-,5-7 என்ற கணக்கில் விஜேந்தர்சிங் தோல்வியடைந்தார். இதையடுத்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விஜேந்தர்சிங் வெளியேற வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளில் ஒன்று பறிபோய்விட்டது. கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தவர் விஜேந்தர்சிங்.


Click it and Unblock the Notifications