பாக்ஸிங்: கியூப வீரரிடம் விஜேந்தர் தோல்வி-வெண்கலமே கிடைத்தது

இதன் மூலம் அவர் வெள்ளி்ப் பதக்கம் வாய்ப்பு பறிபோனது. ஆனாலும் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் விஜேந்தர்.
மிடில்வெயிட் 75 கிலோ எடைப் பிரிவில் இன்று கியூப வீரர் எமிலியோ கோரியாவை அவர் எதிர் கொண்டார். ஆனால், முதல் சுற்றிலிருந்தே எமிலியோ தான் முன்னணியில் இருந்தார்.
இறுதியில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் அவர் விஜேந்தரை தோற்கடித்தார்.
கியூபா வீரரான கோரியா பலம் வாய்ந்த வீரர். இவரது தந்தை கோரியா, மூனிச் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜேந்தர் மோதிய இந்தப் போட்டி நாடு முழுவதும் பெரும் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications