Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்: இந்தியாவின் விகாஸ் கவுடா இன்று சாதிப்பாரா?

Vikas Gowda and Ranjith
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் தடகள போட்டிகளில் இந்தியாவின் விகாஸ் கவுடா, ரஞ்சித் மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல ஹாக்கி போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன.

லண்டன் ஒலிம்பிக் போட்டியி்ல் பங்கேற்ற இந்திய அணியினர் பெரும்பாலானோர் போட்டிகளில் பங்கேற்றுவிட்டனர். இதில் இதுவரை இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம், பாட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் ஆகியவை கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியாவின் மேரி கோம், பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று தடகளம் மற்றும் ஹாக்கி போட்டிகளில் இந்திய அணியினர் களமிறங்க உள்ளனர்.

தடகளம்:

ஆண்களுக்கான தத்தி தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ரஞ்சித் மகேஸ்வரி கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டி மாலை 3.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஆண்களுக்கான வட்டு ஏறிதல் போட்டியின் இறுதிப் போட்டி நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் விகாஸ் கவுடா பங்கேற்க உள்ளார்.

ஹாக்கி:

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, இன்று பெல்ஜியம் அணியுடன் மோத உள்ளது. இப்போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Tuesday, August 7, 2012, 18:57 [IST]
Other articles published on Aug 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+