உலக கோப்பை: தோள்பட்டை வலி-ஷேவாக் நீக்கம்
நாட்டிங்ஹாம்: தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் ஷேவாக் நீக்கப்பட்டுள்ளார்.
டுவென்டி-20 உலக கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து சென்ற சமயத்தில் அதிரடி துவக்க வீரர் ஷேவாக்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரண்டு பயிற்சி போட்டி மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடவி்ல்லை.
இதையடுத்து அவருக்கும் கேப்டன் டோணிக்கும் இடையே மோதல் எழுந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை இருவரும் மறுத்துவிட்டனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி பயிற்சியின் போது ஷேவாக்கிற்கு தோள்பட்டையில் அதிக வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் நேற்று பயிற்சிக்கு வரவில்லை என்றும், மேலும் இன்று அவரால் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே பயிற்சி செய்ய முடிந்தது என்றும் கூறப்படுகிறது. ஷேவாக்கின் காயத்தின் தன்மை அதிகரித்ததை அடு்தது அவர் உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் தென் ஆப்ரிக்கா சென்று தோள்பட்டையில் ஆபரேஷன் செய்து கொள்வார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக துவக்க வீரராக ரோகித் சர்மா, கம்பீருடன் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications