விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன்

12 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 10 சுற்றுகள் முடிவில் ஆனந்த் 6-4 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார். எஞ்சிய 2 ஆட்டங்களில் ஏதாவது ஒன்றில் டிரா செய்தாலே பட்டத்தை மீண்டும் வென்று விடலாம் என்ற நிலை உருவானது.
இந் நிலையில் நேற்று 11வது சுற்று ஆட்டம் நடந்தது. சாதுர்யமாக காய் நகர்த்திய ஆனந்த் 24வது நகர்த்தலில் ஆட்டத்தை டிரா செய்தார்.
இதன் மூலம் 6.5-4.5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றார்.
தமிழகத்தை சேர்ந்தவரான ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 3வது முறையாகும்.
2000 மற்றும் 2007ம் ஆண்டுகளிலும் உலக சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
கருணாநிதி வாழ்த்து:
மீண்டும் உலக சம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா, தமிழகத்தின் பெயரை மீண்டும் உலக அரங்கில் தலைநிமிரச் செய்துள்ளதாகவும் அவருக்கு தனது ஆசிகளைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications