ஜெர்மனியில் கிரீனிக் செஸ் போட்டி- இந்தியாவின் ஆனந்த் சாம்பியன்

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றான 11வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் நைடிட்ஜை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
நேற்று 10வது சுற்று ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த், ஜெர்மனியின் டேனியல் ஃபிரிட்மேனை தோற்கடித்தார். அதேசமயம் 5.5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றிருந்த ஃபேபியானோ கருணா, இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸிடம் தோல்வி கண்டார். இதனால் கருணாவுடன் ஆனந்தும் முதலிடத்துக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று கருணா - பிரிட்மேன் ஆட்டம் டிராவில் முடிந்ததது. அதே நேரத்தில் இறுதி ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றறார். இதனால் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் தட்டிச் சென்றார்.
Story first published: Monday, February 18, 2013, 14:20 [IST]
Other articles published on Feb 18, 2013


Click it and Unblock the Notifications