Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் மாரத்தான்: கென்ய வீரருக்கு தங்கம்

பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் கிளைமாக்ஸ் போட்டியான மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கப் பதக்கம் வென்றார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. கடைசி நாளான இன்று மராத்தான் போட்டி நடைபெற்றது.

புகழ் பெற்ற தியானன்மன் சதுக்கத்தில் தொடங்கிய இந்த போட்டியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் போட்டியின் முதன்மையான அரங்கமான பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில் போட்டி முடிவடைந்தது.

இதில் கென்ய வீரர் சாமுவேல் வன்சிரு முதலில் வந்து தங்கப் பதக்கத்ைத தட்டிச் சென்றார். 2 மணி நேரம் 6 நிமிடம் 32 நொடிகளில் வெற்றி கோட்டை தொட்டு புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். இதன் மூலம் கென்யாவுக்கு அவர் முதல் மராத்தான் தங்கப்பதக்கத்தையும் பெற்று தந்தார்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஜாக்வாட் கரீப் வெள்ளி பதக்கமும், எத்தியோப்பியாவின் சேகே கெபடே வெண்கல பதக்கத்தையும் வென்றனர். மூன்று பேரும் ஆப்பிரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+