Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயஸுடன் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள 25 வயது இளம்வீரர் விஷ்ணுவர்தன்

Leander Paes
ஹைதராபாத்: லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்திய ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் விளையாட விஷ்ணு வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இளம் வீரர் விஷ்ணு வர்தன் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக் என்பது கனவுதான். லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடங்கும் ஜூலை 27தான் விஷ்ணுவர்தனோட பிறந்த நாளும் கூட. அன்று அவருக்கு வயது 25.

டேவிஸ் கோப்பை, ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் போட்டிகள், ஜூனியர் டேவிஸ் கோப்பை ஆகியவற்றில் விளையாடியிருக்கிறார். அவரது உயரம் அவருக்கு நல்ல துணையாக இருக்கிறது.

ஜப்பானில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டேவிஸ் கோப்பையில் முதன்முறையாக விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பின்னர் சீனாவில் சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையரில் விளையாடினார். ஆசியப் போட்டியில் இந்திய ஆடவர் அணியில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.

2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஏடிபி சென்னை ஓப்பன் போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

உலக தரவரிசைப் பட்டியலில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 328-வது இடத்தில் இருக்கிறார். இரட்டையர் பிரிவில் 194வது ரேங்க். 8 வயதில் இருந்து விளையாடி வரும் விஷ்ணூ வர்தன் செகந்திராபாத்தில் பிறந்தவர்.

அண்மையில் மைசூர் மற்றும் பெங்களூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி பரிசுகளை வென்றார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் விளம்பர தூதராகவும் அங்கு பணியாற்றியும் வருகிறார் விஷ்ணு வர்தன். இவரது ரோல்மாடல் பீட் சாம்ப்ரஸ்தான்.

Story first published: Thursday, June 21, 2012, 16:13 [IST]
Other articles published on Jun 21, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+