பைனலில் நுழையுமா இந்தியா?-இன்று நியூசி.யுடன் மோதல்

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடக்கிறது.
இத்தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்றவர்களுடன் தலா ஒரு முறை மட்டுமே மோதுகிறது. இதனால் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் கொண்டதாக அமைந்துள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்து இலங்கையிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து பைனலுக்கு முன்னேற அவர்கள் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இதில் இந்தியா வெற்றி கண்டால், நியூசிலாந்து தொடரில் இருந்து வெளியேறிவிடும். இந்தியாவும், இலங்கையும் வரும் 14ம் தேதி நடக்கும் பைனலில் மோதுவது உறுதி செய்யப்படும்.
இந்நிலையில் இந்திய அணி இன்று சச்சின்,டிராவிட்டை அதிகம் நம்பி இறங்குகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு நாள் போட்டிக்காக பேட்டை கையில் எடுத்திருக்கும் டிராவிட் அணியை காப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டோணி, யுவராஜ், ரெய்னா என அணி பலமாக இருக்கிறது. ஆனால், சூப்பர் துவக்க ஜோடியான ஷேவாக், கம்பீர் இல்லாதது பெரும் குறை.
தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சினும், திணேஷ் கார்த்திக்கும் களம் இறங்குவார்கள். திணேஷ் கார்த்திக்குக்குத் தொடர் முழுவதும் வாய்ப்பளிக்கப்படும் என கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
ஜாகிர் இல்லாதது பந்துவீச்சை லேசான பலவீனமாக்கியுள்ளது. ஆனால், இஷாந்த், ஆர்பி சிங், பிரவீண் கூட்டணி இந்த பிரச்சனையை சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications