Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் டென்னிஸ்- 3-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்த வில்லியம்ஸ் சகோதரிகள்

William Sisters
லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்-செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் இணை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஒலிம்பிக் மகளிர் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமெரிக்காவீன் வில்லியம்ஸ் சகோதரிகள் இணையானது செக் குடியரசின் ஆன்ட்ரியா- லூஸி ரடேகா இணையை எதிர்கொண்டது. போட்டியின் முடிவில் 6-4, 6-4 என்ற செட்களில் வில்லியம்ஸ் சகோதரிகள் இணை வென்றது.

கடந்த 2000, 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் தங்கம் வென்றுள்ள இந்த இணை இப்போது 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் 3 வெவ்வேறு ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்கள் என்ற பெருமையையும் வில்லியம்ஸ் சகோதரிகள் இணை பெற்றுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸூம் , நடப்பு ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸூ தங்கம் வென்றுள்ளனர்.

ஸ்பெயினின் மார்டினெஸ் 1992, 1996, 2004 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். ஆனால் அவர் தங்கம் வென்றதில்லை. இரு வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் மட்டுமே பெற்றுள்ளார்.

Story first published: Monday, August 6, 2012, 10:51 [IST]
Other articles published on Aug 6, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+