Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் போட்டியை முன்நிறுத்தி விளம்பரங்களை வெளியிடுகிறது டுவிட்டர் நிறுவனம்

Twitter Logo
சான் பிரான்சிஸ்கோ: ஒலிம்பிக் போட்டியை குறித்து தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் டுவிட்டர் இணையதளத்தில் பரிமாறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி டுவிட்டர் இணையதளத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

டுவிட்டர் இணையதளம் உலகில் லட்சக்கணக்கான மக்களை இணைக்கும் ஒரு சமுதாய இணையதளமாக மாறியுள்ளது. இதில் உலகில் நடைபெறும் பல சம்பவங்களை குறித்து தகவல்கள் பரிமாறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது லண்டன் ஒலிம்பிக் போட்டி நடைபெறவதால், தினமும் ஒலிம்பிக் போட்டியின் சம்பவங்கள் குறித்து லட்சக்கணக்கான தகவல்கள் பரிமாறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி டுவிட்டர் இணையதளத்தில் உலகின் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளியாகி வருகிறது.

கூகுல் உடன் நேரடி தொடர்பு கொண்ட டுவிட்டரில், பிராக்டர் அண்டு கேம்பில், வெரிசன் கம்யூனிகேஷன் போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்களின் விளம்பரங்கள் வரை வெளியிடுகிறது.

டுவிட்டர் இணையதளத்தில் லட்சக்கணக்கான மக்கள் இணைந்துள்ளதால், இந்த இணையதளத்தில் வெளியாகும் விளம்பரங்கள், டிவி சேனல்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை போல விரைவாக மக்களை சென்றடையும்.

இது குறித்து டுவிட்டர் இணையதளத்தின் வருவாய் மற்றும் விளம்பர துறை அதிகாரி அடம் பயென் கூறியதாவது,

டுவிட்டர் இணையதளத்தில் விளம்பரங்கள் அளிப்பதன் மூலம் பொருட்களுக்கு சந்தையில் பெரியளவிலான அறிமுகம் கிடைக்கிறது. டிவி சேனல்களில் வெளியாகும் விளம்பரங்களை போலவே, டுவிட்டரிலும் நேரடியாக நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. டுவிட்டர் இணையதளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மதிப்பு மிகுந்தவை என்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் டுவிட்டரில் 'லைவ் பார் நவ்' என்ற இசை நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை பெப்சிகோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டது. இதற்கு லட்சக்கணக்கான மக்களின் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல பாடல்களும் டவுன்லோடு செய்யப்பட்டது. இதையடுத்து ஜூன் மாத இறுதியில் ஹாலிவுட் பிரபலம் கேட்டி பெர்ரியின் இசை நிகழ்ச்சியை பெப்சிகோ நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கில் வெளியிட்டது.

இதன்மூலம் பெப்சி குளிர்பானம் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காக டுவிட்டர் இணையதள நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகையை அளித்தது பெப்சி நிறுவனம். இந்த இசை நிகழ்ச்சியை ஒரே நாளில் சுமார் 68 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இதில் 24 சதவீதம் பேர் தங்களின் கருத்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 2, 2012, 14:22 [IST]
Other articles published on Aug 2, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+