Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர்கள் இன்று சாதிப்பார்களா?

Amit kumar dahiya
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற உள்ள மல்யுத்த போட்டிகளில் இந்திய வீரர்கள் அமித் குமார், நார்சிங் யாதவ் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 81 வீரர்கள், வீராங்கனைகள் உடன் களமிறங்கியது. இதன்மூலம் இந்திய அணி அதிக ஒலிம்பிக் பதக்கங்களை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை வாங்கி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

நேற்று நடைபெற்ற போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் மற்றும் ஆண்களுக்கான மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள ஆண்களுக்கான மல்யுத்த போட்டிகளில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ள ஆண்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் ப்ரீ ஸ்டைல் மங்கோலியா, ஈரான் நாட்டு வீரர்கள் மோத உள்ளனர். இவர்களில் வெற்றி பெறும் வீரர், இந்தியாவின் அமித் குமார் தஹியா உடன் மோதுவார். 74 கிலோ எடைப் பிரிவில் ப்ரீ ஸ்டைல் போட்டியில் இந்திய வீரர் நார்சிங் பஞ்சம் யாதவ், கனடாவின் மேத்யூ ஜூதா உடன் மோத உள்ளார். இந்த போட்டி மாலை 6.10 மணிக்கு நடைபெறும்.

மற்ற போட்டிகள்:

இரவு 11.30 மணிக்கு ஆண்களுக்கான கம்பு ஊன்றி தாண்டு போட்டி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 1.50 மணிக்கு ஆண்களுக்கான 1600 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டி நடைபெறும்.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு பெண்களுக்கான சுத்தி ஏறிதல் போட்டி நடைபெற உள்ளது. நள்ளிரவு 12.35 மணிக்கு பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம், நாளை அதிகாலை 1 மணிக்கு பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டம், 1.25 மணிக்கு பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

Story first published: Friday, August 10, 2012, 14:01 [IST]
Other articles published on Aug 10, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+