யூசுப்பதானுக்கு மார்ச் 27ல் திருமணம்: பிசியோதெரபி டாக்டரை மணக்கிறார்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் யூசுப் பதான். இவரது சகோதரர் இர்பான் பதான்வேகப் பந்து வீச்சாளர் ஆவார். ஆட்டத்தில் சரியான திறமையை வெளிப்படுத்தாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யூசுப் பதான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் யூசுப்பதானுக்கும், மும்பையை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் அப்ரீனுக்கும் கடந்த ஆண்டு மார்ச் 24ல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் வரும் 27ம் தேதி நடைபெறும் என யூசுப்பதான் உறவினர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 24 முதலே திருமணம் தொடர்பான சடங்குகள் தொடங்கிவிடும். பதானின் வீட்டில் உறவினர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்படுகிறது. இதனையடுத்து 26ம் தேதி மும்பைக்கு அனைவரும் கிளம்புகின்றனர். 27ம் தேதி திருமணம் நடைபெறும் என நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
திருமண வரவேற்பு யூசுப்பதானின் சொந்த ஊரான வதோதராவில் நடக்கிறது. அங்குள்ள நட்சத்திர ஓட்டல் அல்லது நாடியாத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமண வரவேற்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, March 6, 2013, 17:33 [IST]
Other articles published on Mar 6, 2013


Click it and Unblock the Notifications