ஸ்ரீசாந்த்துக்கு ஸ்வைன்-பிற வீரர்களுக்கும் சோதனை

இதையடுத்து சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஆனாலும் இலங்கைக்கு எதிராக டிசம்பர் 15ம் தேதி துவங்கும் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் இடம் பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலாளருக்கும்...
அதே போல இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் மாயக் பரிஹ்கிற்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கெளதம்-கொஹ்லிக்கும் ஸ்வைன்?:
அதே போல துவக்க ஆட்டக்காரர் கெளதம் காம்பீர் மற்றும் விராத் கொஹ்லி ஆகிய இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த இருவரும், பன்றிக் காய்ச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டதால் செய்திகள் வெளியாகின.
முன்னெச்சரிக்கையாகவே மருந்துகள் எடுத்துக் கொண்டதாகவும், பன்றிக் காய்ச்சலுக்கு டாக்டர்களின் வலியுறுத்தலால் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் பன்றிக் காயச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications