20 வயதில் இப்படி ஒரு வாய்ப்பா.. ஒலிம்பிக்கில் 2வது இந்திய நீச்சல் வீரர்..குவிந்துவரும் பாராட்டுக்கள்
டெல்லி: சாஜன் பிரகாஷை தொடர்ந்து மேலும் ஒரு இந்திய நீச்சல் வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூன் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த தொடருக்கான ஏற்பாடுகளும், தகுதிச்சுற்று போட்டிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் 2021
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, ஆக்கி, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், உள்ளிட்ட விளையாட்டுகளில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்டோர் தகுதிப்பெற்றுள்ளனர்.

நீச்சல் போட்டி
சமீபத்தில் நீச்சல் போட்டிக்காக ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து சாஜன் பிரகாஷ் தேர்வானார். அதிலும் முதல் தர பிரிவில் தகுதி பெற்று அசத்தினார். சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஒரு நிமிடம் 56.38 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதற்காக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது 2வது வீரராக ஸ்ரீ ஹரி நடராஜன் ஒலிம்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தகுதி நேரம்
ரோமில் நடைபெற்ற செட்டி கோலி டிராபி போட்டியில் 100 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் கலந்துக்கொண்ட ஸ்ரீஹரி நடராஜன், 53.77 விநாடிகளில் கடந்து அசத்தினார். இதனால் இவரை ஒலிம்பிக்கில் ஏ பிரிவில் கலந்துக்கொள்ள உலக விளையாட்டு அமைப்பான ஃபினா அமைப்பு தகுதி அளித்துள்ளது

ஒரே நேரத்தில் 2 பேர்
பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீ ஹரி நடராஜனுக்கு 20 வயதே ஆகிறது. இவர் தகுதிப்பெற்றது மூலம், ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த 2 நீச்சல் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவிலும், ஸ்ரீ ஹரி 100 மீ பேக் ஸ்ட்ரோக்ஸ் பிரிவிலும் பங்கேற்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications