லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அப்புறமா கனவு காண ஆரம்பிச்சுட்டேன்... பவானி தேவி விருப்பம்
டெல்லி : டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளார் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி.
இதையொட்டி தான் கடந்து வந்த பாதைகள் குறித்த கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
கடந்த லண்டன் 2012 போட்டிகளுக்கு பிறகு தன்னுடைய ஒலிம்பிக் கனவு துவங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்புலம் இல்லாத பவானி
டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளார் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. இதையொட்டி பிரிட்டனில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். விளையாட்டு தொடர்பான எந்த பின்புலமும் இல்லாமல் தான் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் அதனால் தான் அனைத்திலும் அனுபவத்தை பெற விருப்பத்துடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதல் போட்டியில் தோல்வி
தான் விளையாட்டாக வாள்வீச்சில் ஈடுபட்டதாகவும் முதல் போட்டியில் தான் தோல்வியுற்றதாகவும் தெரிவித்த பவானி தேவி, அதனால் தொடர்ந்து பதக்கங்களை பெறுவதற்காக தான் கடுமையாக உழைத்ததாகவும் இதன்மூலம் மாநில அளவிலிருந்து தான் சர்வதேச அளவிற்கு முன்னேறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் குறித்த கனவு
கடந்த லண்டன் 2012 போட்டிகளுக்கு பிறகு தான் ஒலிம்பிக் குறித்த கனவுகளில் ஈடுபட்டதாகவும் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தான் கனவு காண ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் வாள்வீச்சு அந்த அளவிற்கு பிரபலமாக இல்லாததால் தனக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் ஆதரவு
மேலும் போட்டிகளுக்காக பணத்தை சேர்பபதும் கடுமையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடைய குடும்பத்தினர் மிகுந்த ஆதரவுடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் 2015க்கு பிறகு நிலைமை மாறியதாகவும அவர் தெரிவித்துள்ளார். அரசிடம் இருந்து நிதி பெற்று பெடரேஷனும் தனக்கு உதவியதாக பவானி தேவி குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications