Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவை தாக்கிய ஆண்டர்சன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாஜி பயிற்சியாளர்

டெல்லி: ஜடேஜாவை தாக்கிய ஆண்டர்சன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் அஞ்சுமன் கெய்க்வாட் வலியுறுத்தியுள்ளார்.

Strict action should be taken against Anderson: Gaekwad

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், டெஸ்ட் மேட்ச், ஒருநாள் போட்டி, தோழமை போட்டி என எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலுமே, ஆண்டர்சன் செய்ததை போன்ற செயல்பாட்டை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டதன் மூலம் டோணி தன்னை ஒரு சிறந்த கேப்டன் என்று நிரூபித்துள்ளார்.

ஜடேஜாவின் நடவடிக்கைக்காக 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலாவது அவருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கெய்க்வாட் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவரும் இந்திய அணி, முதலாவது டெஸ்ட் போட்டியில் டிரா கண்டது. அந்த போட்டியின்போது இந்திய வீரர் ஜடேஜாவை ஆண்டர்சன் திட்டி, கீழே பிடித்து தள்ளிவிட்டதாக ஐசிசியில் இந்திய அணி நிர்வாகம், புகார் அளித்துள்ளது.

இதற்கு போட்டியாக இங்கிலாந்து அணியும், ஜடேஜாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 18, 2014, 17:01 [IST]
Other articles published on Jul 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+