Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தஜிகிஸ்தான் வீரரை புரட்டி எடுத்து தங்கம் வென்ற சுஜித் கல்கல்.. 2-9 என பின்தங்கி கம்பேக்!

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப்போட்டியில், இந்திய இளம் வீரர் சுஜித் கல்கல் அசாத்தியமாக மீண்டு வந்து தஜிகிஸ்தான் வீரரை வீழ்த்தி வரலாற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு அவர் நிகழ்த்திய இந்த மிரட்டல் கம்பேக் ஒட்டுமொத்த மல்யுத்த உலகையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

நகோயாவில் நடைபெற்ற ஆடவர் 65 கிலோ தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சுஜித் கல்கல் தஜிகிஸ்தான் நாட்டின் பலம் வாய்ந்த வீரரான அப்துல்மஜித் குடியேவை எதிர்கொண்டார். போட்டியின் முதல் சுற்றில் தஜிகிஸ்தான் வீரர் ஆதிக்கம் செலுத்தினார். சுஜித் கல்கலுக்கு எந்த வாய்ப்பும் தராமல் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றார். ஆரம்பத்தில் பின்தங்கி இருந்ததால் சுஜித் தங்கம் வெல்வது கடினம் என்றே அனைவரும் கருதினர்.

Sujeet Kalkal Wins Gold Medal in Men s 65kg Freestyle Wrestling at Asian Games 2026

2வது சுற்றில் களம் புகுந்த சுஜித் கல்கல், ஆக்ரோஷத்தின் உச்சத்திற்கே சென்றார். எதிராளியை மிரட்டும் வகையில் மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக புள்ளிகளை வாரிக்குவித்தார். கடைசி வினாடிகளில் எதிராளியை திணறடித்து அற்புதமாக முன்னிலை பெற்று த்ரில்லர் வெற்றியை பதிவு செய்தார்.

குத்துச்சண்டையில் பர்வீன் ஹூடா வெற்றி.. சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவுக்கு 13வது தங்கம்

குத்துச்சண்டையில் பர்வீன் ஹூடா வெற்றி.. சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவுக்கு 13வது தங்கம்

கடைசி வினாடி வரை சளைக்காமல் போராடி தங்கப் பதக்கத்தை வென்ற சுஜித் கல்கலின் இந்த வெற்றி, இந்திய மல்யுத்த அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் இளம் புயல் சுஜித் கல்கல்.

Story first published: Friday, October 2, 2026, 15:20 [IST]
Other articles published on Oct 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+