For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2024 - வரலாற்றில் இடம் பிடித்த உசைன் போல்ட்.. ஏலியனால் கூட முறியடிக்க முடியாத சாதனை

பாரீஸ் : ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் பல திறமையான வீரர்களை உலகத்திற்கு அடையாளம் கண்டு எடுத்திருக்கிறது. விளையாட்டு மீது ஆர்வம் இல்லாதவர்களே ஒலிம்பிக்கில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதற்கு காரணம் ஒவ்வொரு வீரர்களும் நாட்டுக்காக உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள் என்பது தான்.

இந்த நிலையில் ஒலிம்பிக்கை பற்றி பேச வேண்டும் என்றால் உசைன் போல்ட் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஒலிம்பிக் தொடரில் ஓட்டப்பந்தயங்களில் பல உலக சாதனையை படைத்திருக்கிறார். இந்த உசைன் போல்ட். கருஞ்சிறுத்தை போல் களத்தில் சீறி பாய்ந்து ஓடி ஒலிம்பிக் வரலாற்றில் எட்டு தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்.

Paris Olympics 2024 usain bolt 2024

அது மட்டும் அல்லாமல் ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையையும் உசைன் போல்ட் படைத்திருக்கிறார். 400 மீட்டர் ரிலே பிரிவில் உசைன் போல்ட் தங்க பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்.

11 முறை உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றிய உசைன் போல்ட் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 9.58 வினாடிகளில் 100 மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்லவே வீரர்களுக்கு நாக்கு தள்ளி விடும். ஆனால் உசைன் போல்ட் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கிலும் ஹாட்ரிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் 9.69 வினாடிகளில் கடந்து அசத்தினார். இதேபோன்று 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் 19 புள்ளி 30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கத்தை கைப்பற்றினார். அன்று இரவு உசைன் போல்ட் பிறந்தநாள் என்பதால் மைதானம் முழுவதும் பிறந்தநாள் பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதேபோன்று லண்டனில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒன்பது புள்ளி ஆறு மூன்று வினாடிகளில் கடந்து தங்கத்தை கைப்பற்றினார்.

200 மீட்டர் பந்தயத்தில் 19.32 வினாடிகளில் கடந்து அதிலும் தங்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் ஓட்டப்பந்தைய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதேபோன்று ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 9. 81 வினாடிகளில் கடந்த உசைன் போல்ட், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் ரிலே பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினார்.

வெறும் வெற்றியை மட்டும் பெறாமல் தன்னுடைய சாதனையை தாமே உடைக்கும் பழக்கத்தையும் உசைன் போல்ட் வைத்திருந்தார். அது மட்டுமில்லாமல் தமது ரெக்கார்டை வேறு எவரும் பல ஆண்டுகளுக்கு தொட கூடாது என்ற அளவுக்கு சாதனையை படைப்பது உசைன் போல்ட்டுக்கு கைவந்த கலை. இந்த ஒலிம்பிக்கில் ஆவது அவருடைய சாதனை முறியடிக்கப்படுமா என்பதை பார்க்கலாம்.

Story first published: Monday, July 15, 2024, 14:47 [IST]
Other articles published on Jul 15, 2024
English summary
summer olympics 2024- Usain Bolt untouchable triple Gold winning performances ஒலிம்பிக் 2024 - வரலாற்றில் இடம் பிடித்த உசைன் போல்ட்.. ஏலியனால் கூட முறியடிக்க முடியாத சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+