பாரீஸ் : ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை அதிக பதக்கங்கள் வென்ற வீரர் என்றால் அது அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்பஸ் தான். ஒலிம்பிக் வரலாற்றில் வெற்றிகரமான வீரராக விளங்கிய மைக்கேல் பெல்ப்ஸ், இதுவரை 28 பதக்கங்களை வென்று இருக்கிறார். அதில் 23 தங்கப்பதக்கம் ஆகும்.
இந்தியா போன்ற நாடுகள் கூட ஒலிம்பிக் வரலாற்றில் இவ்வளவு தங்கம் வென்றதில்லை. ஆனால் மைக்கேல் பெல்ப்ஸ் தனி ஆளாகவே இருந்து பல சாதனைகளை படைத்திருக்கிறார். மைக்கேல் பெல்ப்ஸ் 2000 ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய 15 வது வயதில் நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

இதன் மூலம் மிக சிறிய வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க நீச்சல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 200 மீட்டர் பட்டர்ஃபிளே பிரிவில் 15 வயதில் பெல்ப்ஸ் இறுதிப்போட்டிக்கு வந்து ஐந்தாவது இடத்தை பிடித்தார். எனினும் இந்த தொடரில் அவர் பதக்கம் ஏதும் வாங்கவில்லை.
ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சல் உலகில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தார்.
யாருமே யோசிக்க முடியாத அளவில் 19 வயதிலேயே 100 m பட்டர்ஃபிளை, 200 மீட்டர் பட்டர்ஃபிளை, 200 மீட்டர் மெட்லி,400 மீட்டர் மெட்லி, 800 மீட்டர் பிரீ ஸ்டைல், 400 மீட்டர் மெட்லி ஆகிய பிரிவுகளில் மைக்கேல் பிளிப்ஸ் தங்கப்பதக்கத்தை வென்றார். இதேபோன்று 200 மீட்டர் பிரீ ஸ்டைல், 400 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ஆகிய நீச்சல் பிரிவுகளில் வெண்கலம் வென்றார்.
இதனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பெல்ப்ஸ் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
200 மீட்டர் பிரீ ஸ்டைல், 100 மீட்டர் பட்டர்ஃபிளை, 200 மீட்டர் பட்டர்ஃபிளை, 200 மீட்டர் மெட்லி, 400 மீட்டர் பிரீ ஸ்டைல், 800 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 400 மீட்டர் மெட்லி ஆகிய பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றது மட்டுமல்லாமல் இதில் ஏழு உலக சாதனைகளை படைத்தார்.
இதேபோன்று 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் நான்கு தங்கம், 2 வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் பிறகு தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்த பெல்ப்ஸ், திடீரென்று 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஓய்விலிருந்து திரும்ப வந்தார். அதன் பிறகு மீண்டும் 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற மைக்கேல் பெல்ப்ஸ் ஐந்து தங்க பதக்கத்தை வென்றார்.இந்த நிலையில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் பெல்ப்ஸ் வெள்ளி பதக்கத்தை வென்றார். இதுதான் அவர் பங்கேற்ற கடைசி ஒலிம்பிக் பந்தயம் ஆகும்.
இந்த போட்டியில் மைக்கல் பெல்ப்ஸ் தன்னுடைய ரசிகரான சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூல் உடன் பங்கேற்று தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றினாலே மிகப்பெரிய சாதனை செய்துவிட்டோம் என்று நினைக்கும் வேலையில் மைக்கேல் பெல்ப்ஸ் 23 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி யாராலும் அருகே வர முடியாத அளவுக்கு உச்சத்திற்கு சென்றிருக்கிறார். மைக்கேல் பெல்ப்ஸ்க்கு இயற்கையாகவே நீச்சல் அடிக்க சாதகமான உடல் இருப்பதும், அதற்கான பயிற்சி தியாகம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை செய்ததாலே இவரால் சாதிக்க முடிந்தது.