ஒலிம்பிக் டாப் 10- விளையாடிய அனைத்து ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற அமெரிக்க கூடைப்பந்து அணி
இந்தியாவுக்கு கிரிக்கெட் எப்படியோ அதே போல் அமெரிக்காவுக்கு கூடைப்பந்து விளையாட்டு என்பது மிகவும் முக்கியமாகும். அமெரிக்கர்களின் ரத்தத்தில் ஊறிய விளையாட்டாக இது கருதப்படுகிறது. ஐபிஎல் போல் அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்திய தொடர் உலகின் மிக பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஒலிம்பிக் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணி என்றால் அது அமெரிக்க கூடைப் பந்து அணி தான். ஏனென்றால் இதுவரை நடைபெற்ற 19 ஒலிம்பிக் தொடர்களிலும் அமெரிக்க அணி பதக்கங்களை வென்று இருக்கிறது.

இதில் 16 தங்கப் பதக்கம் அடங்கும். குறிப்பாக 1992, 96,2000, 2008, 2012 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க கூடைப்பந்து அணி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது. குறிப்பாக 1992 ஆம் ஆண்டு களம்பிறங்கிய அமெரிக்க கூடைப்பந்து அணியை கனவு அணி என்று ரசிகர்கள் வர்ணிப்பார்கள். ஏனென்றால் இதில் பங்கேற்று நடந்த 11 வீரர்களுமே ஹால்ஃப் ஃபேமஸ் எனப்படும் கூடைப்பந்து விளையாட்டின் ஜாம்பவன்களாக இருந்தார்கள்.
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க அணி வெண்கல பதக்கத்தை வென்றது. இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய ஒரு இழப்பாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் தங்கம் இல்லாமல் அமெரிக்க கூடை பந்து அணி நாடு திரும்பவே திரும்பாது. ஏற்கனவே 1972 ஆம் ஆண்டு மட்டும்தான் அமெரிக்கா இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
ஆனால் வெண்கலம் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்தது. இதனால் இழந்த பெருமையை மீட்க வேண்டும் என 1992 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கனவு அணி களம் இறங்கியது.
இதில் கூடைப்பந்து வரலாற்றில் முடி சூடம் மன்னனாக விளங்கும் மைக்கேல் ஜார்டன், பேட்ரிக், கிறிஸ் முள்ளான் போன்ற வீரர்கள் பங்கேற்றனர். இதில் அமெரிக்க அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று எட்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஒரு போட்டியில் கூட தோல்வியுற்றல்வாமல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.


Click it and Unblock the Notifications