டென்னிஸ் தாரகை சுனிதா ராவ்!
கொல்கத்தா:
அமெரிக்கா வாழ் இந்தியரான சுனிதா ராவ் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவுக்காகவிளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுனிதா ராவ் அகிலஇந்திய டென்னிஸ் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்றடென்னிஸ் சங்கம் சுனிதாவை விளையாட அனுமதித்துள்ளது. இருப்பினும் இந்தியவீராங்கனையாக இன்னும் சுனிதாவை அங்கீகரிக்கவில்லை.
உலகத் தர வரிசையில் 219வது இடத்தில் உள்ளார் சுனிதா ராவ். தொடர்ந்துஇந்தியாவுக்காக விளையாட விரும்புவதாக சுனிதா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த ஆண்டுக்குள் இந்தியாவின் நம்பர் டூ வீராங்கனை என்றஅந்தஸ்தை அடைய லட்சியம் கொண்டுள்ளேன். இதற்காக கடுமையான பயிற்சிமேற்கொண்டுள்ளேன்.
அடுத்த ஆண்டுக்குள் சானியா மிர்ஸாவை தர வரிசையில் முந்துவது எனது அடுத்தஇலக்கு. இந்தியாவைச் சேர்ந்த ஷிகா ஓபராய் தர வரிசையில் என்னை விடமுன்னணியில் (193) இருக்கிறார். அதற்கு காரணம் அவர் நிறைய போட்டிகளில்விளையாடுவதுதான்.
சாதித்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும். சானியாவுக்கு திறமை உள்ளதால் புகழும்கிடைத்துள்ளது. அவரது சாதனை மிகப் பெரியது. அவருக்கு முன்பு வெகு சிலஇந்திய வீராங்கனைகள்தான் இந்த அளவுக்கு சாதனை புரிந்துள்ளனர். சானியாவால்தான் இப்போது நிறைய பேர் டென்னிசில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார் சுனிதாராவ்.
கடந்த ஆண்டே சுனிதா இந்தியா சார்பில் விளையாடியிருப்பார். ஆனால் அப்போதுசுனிதா இந்தியா சார்பில் விளையாட இந்திய டென்னிஸ் சங்கம் ரூ. 5 கோடி பணம் தரவேண்டும் என சுனிதாவின் அப்பா கோரியதால், அதை ஏற்க டென்னிஸ் சங்கம்மறுத்து விட்டது.
இதுகுறித்து சுனிதாவிடம் கேட்டபோது, எனது தந்தை இந்திய டென்னிஸ் சங்கத்திடம்பேசியது குறித்து எனக்குத் தெரியாது. வருங்காலத்தில் இந்திய வீராங்கனையாகடென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தற்போது சர்வதேச டென்னிஸ் அரங்கில் உள்ள வீராங்கனைகளில் சானியாவுக்குஅடுத்தபடியாக ஷிகா ஓபராய், அங்கிதா பம்ப்ரி ஆகியோர் உள்ளனர். சுனிதாஇரட்டையர் வரிசையில் 155வது இடத்தில் உள்ளார்.
இதுவரை விளையாடியுள்ள ஒற்றையர் போட்டிகளில் 136 போட்டிகளில் வெற்றியும்,124 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளார் சுனிதா. இரட்டையர்போட்டிகளில், 53 வெற்றியையும், 58 தோல்வியையும் சந்தித்துள்ளார்.
உலகத் தர வரிசையில் சானியா மிர்ஸா 70வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னா, சேட்டன் ஆனந்த் தோல்வி:
இதற்கிடையே மாட்ரிட் நகரில் இன்று நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டியின் தலாவது சுற்றிலேயே இந்திய வீரர் சேட்டன் ஆனந்த் மற்றும் சாய்னாநேஹ்வால் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சேட்டன் ஆனந்த் தென் கொரியாவின் லீஹூவான் இயை சந்தித்தார். இதில் 21-18, 18-21, 21-10 என்ற புள்ளிக் கணக்கில்தோல்வியுற்றார்.
மகளிர் ஒற்றையர் போட்டியில் சாய்னா நேஹ்வால் சீனாவின் ஜியாங்யாஞ்ஜியோவிடம் 21-10, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றார்.
இருப்பினும் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரூபேஷ் குமார், தாமஸ்சான்வே ஜோடி 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றது.
கலப்பு இரட்டையர் போட்டியில், ஜ்வாலா குட்டா, தீஜு ஜோடி, இன்று நடைபெறும்முதலாவது சுற்று ஆட்டத்தில் மலேசியே ஜோடியை சந்திக்கவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:48 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications