Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேரளக்காரர்களே.. இதோ இன்னும் ஒரு "சன்னி லியோன்" வாய்ப்பு உங்களுக்கு!

மும்பை: புட்சால் விளையாட்டு தெரியுமா? தெரியாதா, பரவாயில்லை, ஐபிஎல், புரோ கபடி லீக் போல, புட்சால் விளையாட்டுக்காக பிரீமியர் புட்சால் போட்டிகள் இந்தியாவில் நடப்பது தெரியுமா?

அதுவும் தெரியாதா. சரி பரவாயில்லை. சன்னி லியோனை தெரியுமா?

தெரியும்தானே. அப்ப இங்க கொஞ்சம் கிட்டக்க வாங்க. உங்களுக்கு முக்கியமான ஒரு விஷயம் இருக்கு.

பிரீமியர் புட்சால் விளையாட்டில், கொச்சியைச் சேர்ந்த கேரளா கோப்ராஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராகவும், அதன் இணை உரிமையாளராகவும் சேர்ந்துள்ளார் பிரபல நடிகை சன்னி லியோன்.

சரி சரி இருங்க பாஸ்

சரி சரி இருங்க பாஸ்

சரி சரி உங்களுடைய அவசரம் புரிகிறது. சன்னியை எப்போது எங்கே பார்க்கலாம் என்பதுதானே. அதற்கு முன், புட்சால் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

உள்ளரங்க கால்பந்து போட்டி

உள்ளரங்க கால்பந்து போட்டி

உள்விளையாட்டு அரங்கில் விளையாடப்படும் கால்பந்து போட்டிதான் புட்சால். ஒரு அணியில், கோல் கீப்பர் உள்பட, 5 பேர் தான் இருக்கவேண்டும். எத்தனை மாற்று வீரர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். மரம் அல்லது கடினமான தரையில் இந்தப் போட்டி நடக்கும். மைதானமும் சிறியதுதான்.

இது 2வது சீசன்

இது 2வது சீசன்

பல்வேறு நாடுகளில் பிரபலமான இந்த புட்சால் விளையாட்டை, பிரீமியர் புட்சால் என்று இந்தியாவில் போட்டியை நடத்தி வருகின்றனர். தற்போது இரண்டாவது சீசன் நடந்து வருகிறது.

நம்ம சன்னி

நம்ம சன்னி

இதில் கேராளவின் கொச்சினைச் சேர்ந்த கேரளா கோப்ராஸ் அணியின் இணை உரிமையாளராக நம்ம சன்னி லியோன் சேர்ந்துள்ளார். அணியின் தூதரும் அவர்தான்.

 15ம் தேதி முதல்

15ம் தேதி முதல்

வரும் 15ம் தேதி, மும்பையில், இரண்டாவது சீசன் போட்டிகள் நடக்க உள்ளன. 17ம் தேதி வரை அங்கு போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு, 19 முதல், 24ம் தேதி வரை, பெங்களூரு கோரமங்களாவில் உள்ள இன்டோர் மைதானத்தில் போட்டிகள் நடக்க உள்ளன.

6 அணிகள்

6 அணிகள்

அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள், துபாயில், செப்., 26 முதல், அக்டோபர் 1 வரை நடக்க உள்ளன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை வாரியர்ஸ், சென்னை சிங்கம்ஸ், டெல்லி டிராகன்ஸ், கேரளா கோப்ராஸ், பெங்களூரு ராயல்ஸ், தெலுகு டைகர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சன்னி லியோனுக்காக இல்லாவிட்டாலும், இந்த புது வகையான போட்டியை பார்க்க தயாராக இருங்க.

Story first published: Saturday, September 9, 2017, 10:02 [IST]
Other articles published on Sep 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+