Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷர்துல் தாக்கூர் அழகில் ஷாக் ஆன சுரேஷ் ரெய்னா... இணைந்து காபி சாப்பிட விருப்பம்

சென்னை : ஷர்துல் தாக்கூருடன் இணைந்து காபி சாப்பிட வெளியில் போக வேண்டும் என்று சிஎஸ்கே துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

2011 World cup Finals Match Fixing issue..பரபர விசாரணை

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டால், அந்த அட்டவணையில் ஐபிஎல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் சிஎஸ்கே, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் மூலம், பல்வேறு பதிவுகளை பகிர்ந்து தனது ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வருகிறது.

காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல்

காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல்

கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அதில் இடம்பெற்றுள்ள இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளுக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இதனிடையே, ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தொடர் பதிவுகள் மூலம் தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து சிஎஸ்கே குஷிப்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே, தோனி, ரெய்னா உள்ளிட்டவர்களின் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து ரசிகர்களை கொள்ளை கொண்டது. தொடர்ந்து பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறது.

சிஎஸ்கே வீரர்கள்

சிஎஸ்கே வீரர்கள்

தற்போது ட்ரெண்ட்டிங்கில் உள்ள ஜெண்டர் ஸ்வாப் மூலம் தன்னுடைய அணி வீரர்களை பெண்களாக மாற்றி அழகு பார்த்துள்ளது சிஎஸ்கே. அனைவரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் சுரேஷ் ரெய்னாவின் மனதை கவர்ந்தது என்னவோ ஷர்துல் தாக்கூர்தான். அவருடன் இணைந்து தான் வெளியில் காபி சாப்பிட ஜோடியாக போக வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சகோதரி கமெண்ட்

சகோதரி கமெண்ட்

இதனிடையே, இந்த அழகிகளில் மிகவும் அழகாக, சிவப்பு லிப்ஸ்டிக்குடன், அழகான கண்களுடன் தீபக் சஹர் காணப்படுவதாக அவருடைய சகோதரி மால்ட்டி, கமெண்ட் செய்துள்ளார். ஆண்களை அழகான பெண்களாகவும், பெண்களை கம்பீரமான ஆண்களாகவும் மாற்றிக் காட்டும் இந்த ஆப், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. சமீபத்தில் யுஸ்வேந்திர சஹல், ரோகித் சர்மாவை பெண்ணாக மாற்றி ஆனந்தப்பட்டார்.

Story first published: Friday, June 26, 2020, 8:30 [IST]
Other articles published on Jun 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+