லெப்ட்ல ஒன்னு, ரைட்ல ஒன்னு: 2 கோல்கள் அடித்து கொலம்பியாவை வெற்றி பெறச் செய்த ரோட்ரிகஸ்
ரியோடி ஜெனீரோ: ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளின் நாக்அவுட் சுற்றில் கொலம்பியா உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளின் நாக்அவுட் சுற்றுகள் தற்போது நடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை இரவு நடந்த போட்டியில் கொலம்பியா மற்றும் உருகுவே அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கொலம்பியா அணி வீரரான ஜேம்ஸ் ரோட்ரிகஸ்.

கொலம்பியா
கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த இரண்டு கோல்களையும் போட்டது வெறும் 21 வயதே ஆகும் ஜேம்ஸ் ரோட்ரிகஸ்.

ரோட்ரிகஸ்
ஆட்டத்தின் முதல் பாதியில் இடது காலால் ஒரு நச் கோலும், இரண்டாம் பாதியில் வலது காலால் ஒரு கோலும் போட்டு அசத்தினார் ஜேம்ஸ் ரோட்ரிகஸ்

கோல்கள்
இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் 140 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் ரோட்ரிகஸ் நேற்று அடித்த கோல் சிறந்த கோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

காற்றில் வந்த பந்து
காற்றில் பறந்து வந்த பந்தை ரோட்ரிகஸ் தனது மார்பால் தடுத்து அது விழுந்த இடத்தில் இருந்து இடது காலால் எத்த அது அழகான கோலாக மாறியது.

பிரேசில்
பிரேசில் நாக்அவுட் சுற்றில் போராடித் தான் சிலியை வென்றது. காலிறுதியில் பிரேசில் கொலம்பியாவுடன் மோதுகிறது. ரோட்ரிகஸ்ஸின் ஆட்டத்தை பார்க்கையில் பிரேசில் அவரிடம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications