Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெட்டை பெல்ப்ஸும்.. குட்டி சிமோனும்.. சர்ச்சைகளை ஊதித் தள்ளி சாதித்த ஸ்டார்கள்!

ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் மற்ற வீரர்களை விட இந்த இரு அமெரிக்கர்கள்தான் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து விட்டனர். காரணம் இவர்களது சாதனை மட்டுமல்ல, உயரமும் தான்!

ஒருவர் மைக்கேல் பெல்ப்ஸ். இன்னொருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ். பெல்ப்ஸ் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால் சிமோன் குறித்து நிறையப் பேச வேண்டும். இந்த சின்னப் பொண்ணுக்கு 19 வயதுதான். என்னா ஒரு துறுதுறுப்பு. இந்தப் பெண்ணிடம் உள்ள சாதிக்க வேண்டும் என்ற தாகத்தில் பாதி அளவு கூட நம்மில் பலரிடம் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த வயதிலேயே இவர் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை அவர் 3 தங்கப் பதக்கங்களை அள்ளியுள்ளார். மேலும் பெல்ப்ஸ் மற்றும் சிமோனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது.

31 வயது பெல்ப்ஸ்.. 19 வயது சிமோன்

31 வயது பெல்ப்ஸ்.. 19 வயது சிமோன்

19 வயதாகும் சிமோன் 4.8 அடி உயரமே கொண்டவர். பெல்ப்ஸோ 6.4 அடி உயரம் கொண்டவர். இருவரையும் அருகருகே நிறுத்திப் பார்த்தால் சிமோன் ஒரு குழந்தை போலத் தெரிகிறார். இவர்கள் இணைந்திருக்கும் படமும் கூட வைரல் ஆகியுள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர் பெல்ப்ஸ்

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர் பெல்ப்ஸ்

பெல்ப்ஸ் கடந்த ஆண்டு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியவர். இதற்காக சீரமைப்பு முகாமுக்கும் போய் வந்தவர். அதிலிருந்து மீண்டு வந்து ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளார் பெல்ப்ஸ்.

குடி அடிமைத் தாயிடமிருந்து மீண்டவர் சிமோன்

குடி அடிமைத் தாயிடமிருந்து மீண்டவர் சிமோன்

மறுபக்கம் சிமோன் அவரது 6வது வயதில் தத்து கொடுக்கப்பட்டார். காரணம் அவரது தாயார் ஒரு குடி அடிமை, போதைப் பொருள் பழக்கம் உடையவர். அவரது கொடுமையிலிருந்து மீள முடியாமல் தவித்த சிமோனை அவரது தாய் வழித் தாத்தாவை தத்தெடுத்துக் கொண்டார். சிமோனை அவரது தாயாரிடமிருந்து மீட்டார்.

கைது செய்யப்பட்டவர் பெல்ப்ஸ்

கைது செய்யப்பட்டவர் பெல்ப்ஸ்

பெல்ப்ஸ் இருமுறை அதி வேகமாக கார் ஓட்டியதாக வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டவர். சூதாட்டத்திற்கும் அடிமையாக இருந்தவர் பெல்ப்ஸ். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து அசத்தியுள்ளார்.

அனைத்தையும் தாண்டி

அனைத்தையும் தாண்டி

இப்படி பல தடைகளையும், உயர வேறுபாடுகளையும் தாண்டி இருவரும் தத்தமது துறைகளில் செய்துள்ள சாதனைகள் அத்தனை அசாத்தியமாவை. அபாரமானவை. அமெரிக்காவின் மிகப் பெரிய ஸ்டார்களாக இருவரும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளனர்.

Story first published: Tuesday, August 16, 2016, 13:20 [IST]
Other articles published on Aug 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+