Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பெயின் செஸ் போட்டி- சாம்பியன் பட்டத்தை வென்ற அரவிந்த் சிதம்பரம்

ஸ்பெயின் : ஸ்பெயினில் நடைபெற்ற 41வது பில்லா டி பெனாஸ்கியுவ் சர்வதேச செஸ் ஓபன் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது.தமிழ்நாட்டில் இருந்து செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் அதிக அளவில் உருவாகி பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இதில் முன்னோடியாக திகழ்பவர் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த்.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

தற்போது அவருக்கு பின் பிரக்யானந்தா பதினொன்றாம் படிக்கும் போது பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களை வென்று வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் 2000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஸ்பெயின் போட்டி

ஸ்பெயின் போட்டி

இதற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மேலும் ஒரு செஸ் வீரர் சர்வதேச அளவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஸ்பெயினில் நடைபெற்ற இந்த தொடரில் பத்து சுற்று போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் பங்கேற்றார்.

6 வெற்றிகள்

6 வெற்றிகள்

இதில் தொடர்ந்து முதல் நான்கு சுற்றுகளில் வெற்றியும் அடுத்த இரண்டு சுற்றுகளில் டிராவும் எட்டாவது சுற்றில் தோல்வியும் தழுவி கடைசி இரண்டு சுற்றில் வெற்றி பெற்றார் பத்து சுற்று முடிவில் சிதம்பரம், கோவானாசியான், சத்வாணி ஆகிய மூன்று பேரும் எட்டு புள்ளிகளில் சம நிலையில் இருந்தனர்.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

இதனை அடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கக்கூடிய டைப்ரைக் முறை கடைபிடிக்கப்பட்டது .இதில் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் இதில் மற்றொரு இந்திய வீரரான சர்வாணி முதலிடத்தை பிடித்தார். சிதம்பரத்தின் பயிற்சியாளர் ஆன ஆர்பி ரமேஷ் பட்டம் என்ற சிதம்பரத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, July 16, 2022, 18:23 [IST]
Other articles published on Jul 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+