Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்தியனுக்கு அர்ஜுனா விருது..என்ன சொல்றாரு நம்ம சாம்பியன்?

சென்னை : தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருது வென்றுள்ளார். இவர் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றார். அதற்கு முன்பு காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்று இருந்தார்.

தான் அடுத்து தரவரிசையில் முன்னேறுவதை லட்சியமாக கொண்டு ஒரு வருடத்தில் முதல் இருபது இடங்களுக்குள் வர முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அடுத்து ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்று சாதிக்க வேண்டும் என தன் அடுத்த இலக்கை பற்றி கூறினார்.

யார் இந்த சத்தியன்?

யார் இந்த சத்தியன்?

25 வயது ஆகும் சத்தியன் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசித்து வருகிறார். சர்வதேச அளவில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 39வது இடத்தில் இருக்கிறார். இவரது பயிற்சியாளர் ராமன், முன்னாள் தேசிய சாம்பியன் ஆவார்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

தற்போது அர்ஜுனா விருது வென்றுள்ள அவர் தன் அடுத்த திட்டங்களைப் பற்றி பேசினார். அதில் அடுத்த ஒரு வருடத்தில் தரவரிசையில் டாப் 20, இரண்டு வருடத்தில் டாப் 10 மற்றும் ஒலிம்பிக் பதக்கம் ஆகியவற்றை இலக்காக வைத்து தான் உழைக்கப் போவதாக கூறினார்.

கடந்த கால வெற்றிகள்

கடந்த கால வெற்றிகள்

"கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு ப்ரோ டூர் பட்டத்தை வென்று இருக்கிறேன். உலக தரவரிசையில் 39வது இடத்தை பிடித்திருக்கிறேன். சில பட்டங்களையும், காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றேன். அதிலும், ஆசிய போட்டிகளில் கிடைத்த பதக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என தன் வெற்றிகளை பற்றிக் குறிப்பிட்டார்.

அடுத்து சிறப்பு பயிற்சி வேண்டும்

அடுத்து சிறப்பு பயிற்சி வேண்டும்

அடுத்த ஆறு வருடங்களுக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சிகளில் சிறந்து விளங்கும் சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் ஒவ்வொரு வருடமும் 150 நாட்கள் பயிற்சி செய்ய இருப்பதாகவும், அதற்கு வருடத்திற்கு 20-25 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தார். அவரது பயிற்சியாளர் கூறுகையில், மற்ற ஆசிய விளையாட்டு வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றால் தான் அவர் அடுத்த இலக்குகளை அடைய முடியும். அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம் என கூறினார்.

தமிழக வீரர் ஒருவர் இந்த ஆண்டு அர்ஜுனா விருது வென்றதை அடுத்து சத்தியனுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Friday, September 21, 2018, 14:02 [IST]
Other articles published on Sep 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+